Saturday 18th of May 2024 06:57:02 PM GMT

LANGUAGE - TAMIL
-
இங்கிலாந்துடனான பயணங்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்  தடை!

இங்கிலாந்துடனான பயணங்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தடை!


இங்கிலாந்தில் புதிய வகைக் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவரும் நிலையில் அந்த நாட்டில் இருந்து இடம்பெறும் அனைத்து விமான சேவைகளையும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சில தடை செய்துள்ளன.

புதிய வகைக் கொரோனா வைரஸ் தங்கள் நாட்டுக்குள் பரவாதிருக்கும் முயற்சியாக நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் ஆகிய இரண்டு நாடுகளும் இங்கிலாந்திலிருந்து வரும் விமானங்களை நிறுத்தி வைத்துள்ளன.

இங்கிலாந்தில் இருந்து பெல்ஜியம் செல்லும் ரயில்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்குத் தடை விதிப்பது குறித்து தமது நாடும் பரிசீலித்து வருவதாக இத்தாலி வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியும் இதேபோன்று இங்கிலாந்து விமானங்களுக்குத் தடை விதிப்பது குறித்துத் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில் இங்கிலாந்து அரசு அங்கு கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ளது. கிரிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி திட்டமிடப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாது என பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸ் ஆபத்தானது என்பதற்கான அறிவியல் ரீதியான எந்த ஆதரங்களும் இதுவரை இல்லை.

இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவரும் நிலையில் வைரஸில் இந்த மாறுபாடு ஏற்பட்டிருக்கலாம் எனக் சில சுகாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸில் இதே வகையான பிறழ்வு நெதர்லாந்து, டென்மார்க் மற்றும் அவுஸ்திரேலியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

புதியவகை கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இங்கிலாந்தில் இருந்து வரும் அனைத்து விமானங்களையும் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் ஜனவரி - 01 வரை தடை செய்வதாக தெதர்லாந்து அறிவித்துள்ளது.

தற்போது இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வகை வைரஸ் குறித்து எந்தத் தெளிவும் இல்லாதததால் முடிந்தவரை ஆபத்துக்களைத் தவிர்ப்பதே இந்தத் தடையின் நோக்கம் என நெதர்லாந்து அரசு அறிவித்துள்ளது.

இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்காவில் புதிய வகை வைரஸ் பரவிவரும் நிலையில் அங்கிருந்து வரும் விமானங்களை தடை செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக ஜேர்மனி சுகாதார அமைச்சர் ஏ.எப்.பி. செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸூம் இவ்வாறான தடையை விதிப்பது குறித்து ஆராய்வதாக அந்நாட்டில் பி.எப்.எம். தொலைக்காட்சி செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இதேவேளை, இங்கிலாந்திலிருந்து இடம்பெறும் பயணங்களைத் தடை செய்வது குறித்து அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாகளும் ஒருங்கிணைந்த ஒரு முடிவை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான ஒரு ஒருங்கிணைந்த முடிவையே தமது நாடும் எதிர்பார்ப்பதாக ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர் அரஞ்சா கோன்சலஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பயணத் தடை குறித்து அயர்லாந்து அரசாங்கமும் அவசரமாகக் கூடி பலிசீலித்து வருகிறது. இதனை அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஸ்டீபன் டொன்னெல்லி உறுதி செய்துள்ளார்.

இங்கிலாந்தில் இருந்து விமானங்களுக்கு தடை விதிக்க ஆஸ்திரியாவும் திட்டமிட்டுள்ளது. தற்போது இதற்காக திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக ஆஸ்திரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Category: செய்திகள், புதிது
Tags: இங்கிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE